தொலைக்காட்சி விளம்பரங்கள்

தேர்தலின் போக்கைத் தலைகீழாக சில மணிப் பொழுதில் மாற்றி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது தொலைக்காட்சி ஊடகங்கள். அவர்கள் வெளியிடும் எந்தச் செய்தியும் கடைகோடி கிராமம் வரை எளிதாகப் போய்ச் சேறுகிறது. மேலும் காட்சி ஊடகங்கள் நம்மை இன்று புறக்கணிக்கதான் செய்கின்றன. உதாரணமாக, நாம் தமிழர் கட்சியின் முதல் நாள் வேட்பாளர் அறிவிப்புப் பற்றிச் செய்திகள் வெளியிட்டனர், ஆனால் அதன்பின் நாம் தமிழர் கட்சி அறிவித்த வேட்பாளர்கள் பற்றி எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. நாம் முன்னெடுத்து வைக்கும் அரசியல் பற்றியோ, நமது கொள்கைகள் பற்றியோ பெரிதாகச் செய்திகள் வெளியிடுவது இல்லை. தமிழ்நாட்டில் பல லட்சம் மக்கள் தினசரி தொலைக்காட்சியை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். காட்சி விளம்பரங்கள் மூலம் சாமானிய மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் கொள்கையையும், தேர்தல் சின்னத்தையும் எளிதில் கொண்டு செல்ல முடியும்.
விவரம்
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளிலும், பொது இடங்களிலும், தேநீர்க் கடைகளிலும், வியாபார நிறுவனங்களிலும், பொழுதுபோக்குக் கடைகளிலும் தினசரி காட்சி ஊடகங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அரசியல் விவாதங்கள் பெரும்பாலும் தேநீர்க் கடைகளில் தான் நடைபெறுகின்றன. விளம்பரங்கள் கொடுப்பதன் மூலம் நமது கட்சியின் தேர்தல் சின்னத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்ய முடியும்.
நாம் தமிழர் கட்சி 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட நிறுத்தியிருக்கும் திறமையான, படித்த, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த வேட்பாளர்களைப் பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்லக் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
காட்சி ஊடக விளம்பரம்
காட்சி ஊடகங்கள் அதிக மக்களைச் சென்றடையக்கூடியதாக இருப்பதால், விளம்பரச் செலவுகளும் (ஊடகத்தைப் பொறுத்து) அதிகமானதாக இருக்கிறது. காட்சி ஊடகங்களில் கட்சித் தேர்தல் விளம்பரத்தைத் தேர்தல் முடியும் வரை தொடர்ந்து கொடுக்கும் திட்டம் உள்ளது.
- தேர்தல் வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் கொண்டு சேர்ப்பது.
- வேட்பாளர்கள் படிப்பு, தொழில் சார்ந்த துறைகள், எந்த ஒரு குற்ற வழக்குப் பின்னணியிலும் இல்லாதவர்கள் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
- தேர்தல் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.