தொடர் மாதாந்திர தலைமை அலுவலக செலவுகள் - மே மாதம் 2025

‘பொருள் இல்லார்க்கு இல்லை இவ்வுலகம்!’ – ‘தமிழ்மறையோன்’ திருவள்ளுவப் பெருமகனார்.
‘சேமிப்பைப் புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமை அடைய முடியாது!’ – ஆபிரகாம் லிங்கன்
என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்!
தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமாகத் தன்னலமற்று ஒரு தூய அரசியலை முன்னெடுப்பதற்காக நாம் தமிழர் கட்சி எனும் ஒரு மாபெரும் அரசியல் படையைக் கட்டி எழுப்பி வருகிறோம். இப்பெரும்போரில் அறப்போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியை ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைக்கப் பாடுபட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமையாகிறது. அதனை நிறைவேற்றும் பொருட்டு, கருத்தியல் பரப்புரையும், களப்பணியும், மக்கள் நலப் பணிகளும் செய்து ஈடேற்றப் பொருளாதாரத் தன்னிறைவு மிக அத்தியாவசியக் காரணியாகிறது. ‘விடுதலை என்பது தேசியக்கடமை! இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய நெருக்கடியால் பிறக்கும் துன்பத்தைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது துரோகமாகும். அந்நெருக்கடியினை முழுத் தேசிய இனமே பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க, நம் கட்சி எதிர்கொண்டிருக்கும் இப்பொருளாதார நெருக்கடியினையும், நிதிச்சுமையையும் பகிர்ந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இனமானத்தமிழரின் தலையாயக் கடமையாகும். மாதந்தோறும் தங்கள் வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை இனமானம் காக்க வழங்குவது, நாம் தமிழர் கட்சியின் பெரும் வளர்ச்சிக்கு ஆதாரமாய் விளங்கும். இதனை உணர்ந்து, நமது கட்சியை வளர்த்து வார்த்தெடுக்க நிதியுதவி அளித்திடக் கோருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் இதன் மூலம் பெறப்படும் நிதியைக் கொண்டு,
- தலைமை அலுவலக நிர்வாகச் செலவுகள்,
- தலைமையகத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளுக்கானச் செலவுகள்,
- முன்னோர் நினைவுச் சுவரொட்டிகள், பதாகைகள் அச்சிடும் செலவுகள்,
- தலைமையால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள்,
- போராட்டங்களுக்கானச் செலவுகள்,
- தலைமை அலுவலக உணவுச் செலவுகள்,
- தலைமை அலுவலக ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியச் செலவுகள்,
- ஊடகப்பிரிவு வாகனகளுக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள்,
- ஊடகப்பிரிவுப் பயணத்திட்டச் செலவுகள்,
- ஊடகப்பிரிவுக் கருவிகளுக்கானச் செலவுகள்,
- இணையதளம் மற்றும் செயலிகளுக்கான பராமரிப்பு மற்றும் சேமிப்பகக் கட்டணங்கள்,
- கணினி மற்றும் மென்பொருட்களுக்கானச் செலவுகள்,
- மாத இதழ் அச்சிடல் மற்றும் அஞ்சல் செலவுகள்,
- தொலைபேசி வசதி,
- இணைய வசதி,
- மின்சார வசதி
என எல்லாச் செலவினங்களையும் நம்மால் சமாளித்து, கட்சிப்பணிகளை இன்னும் வீரியமாகத் துரிதப்படுத்த முடியும். இதனையுணர்ந்து இன விடுதலைக்களத்தில் அயராது நிற்கும் நாம் தமிழர் கட்சியை அரசியல் பேராற்றலாக மாற்ற தங்களால் இயன்ற நிதியை வழங்குங்கள். உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இதுகுறித்துப் பேசுங்கள். இதற்கான இன்றியமையாத் தேவையை உணரச் செய்து, கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்க செய்யுங்கள் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வருமானம் காக்கும் நம் இனமானம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி