நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், சின்னம், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், தேர்தல் பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டம், கொள்கை விளக்கப் பொதுகூட்டம் போன்ற கூட்டங்கள் நடத்தவும், பொது இடங்களில் கட்டவும் கட்சிப் பதாகை மிகவும் முக்கியமானது. நமது கட்சியின் முக்கியக் கொள்கைகள் அனைத்தும் கட்சிப் பதாகைளில் அச்சிட்டு நகரின் முக்கியப் பகுதியில் கட்டுவதன் மூலம் எளிதாக மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியும். மேலும் கூட்டங்கள் நடத்தும் போது நமது கொள்கைகளையும், சின்னத்தையும், நாம் தமிழர் எடுத்து இருக்கும் மாற்றுப் புரட்சி பேசுபொருளாகும். தொகுதிக்கு 50 கட்சிப் பதாகைகள் வரை தேவைப்படுகிறது.