நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், சின்னம், கட்சியின் கொள்கைகள் போன்றவறை மக்களிடம் கொண்டு செல்லவும், தேர்தல் பரப்புரையின் போது உபயோகிக்கவும் துண்டறிக்கை மிகவும் முக்கியானது. நமது கட்சியின் முக்கியக் கொள்கைகள் அனைத்தும் துண்டறிக்கையில் அச்சிட்டு எளிதாக மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 70000 முதல் 80000 ஆயிரம் துண்டறிக்கைகள் தேவைப்படுகின்றன. முதற்கட்டமாக 10000 துண்டறிக்கைகள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.