வீட்டுப் பதாகைகள்

வீடுகளில் தேர்தல் வரை கட்சிப் பதாகை அடித்து உறுப்பினர்கள், உணர்வாளர்களின் வீடுகளில் கட்டுவதன் மூலம் சின்னத்தையும், கட்சிக் கொள்கைகளையும் எளிதாக அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியும். மேலும் வீட்டில் உள்ளவர்கள் நமது கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் களப்பணியாளராக மாறிவிடுவார். தெருவுக்கு 2 வீடுகளில் கட்டுவதன் மூலம் கட்சியும், சின்னமும் அந்தப் பகுதிகளில் பேசுபொருளாகும், அது நமது கட்சியை எளிதாக வெற்றி பெறச் செய்யும்.

விவரம்

வீடுகளில் பதாகைகள் கட்டுவதன் மூலம் தினமும் பலபேரிடம் நமது கட்சியையும், கொள்கைகளையும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். வீட்டில் உள்ளவர்களை வீட்டில் இருந்தபடியே களப்பணி செய்ய வைப்பது தான் வீட்டுப் பதாகைத் திட்டம்.

நாம் தமிழர் கட்சி 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களையும், கட்சியின் கொள்கைகளையும், வரைவு அறிக்கையையும் மக்களிடம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வீட்டுப் பதாகைகள் கைகொடுக்கும்.