ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்

  1. முகப்பு
  2. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு இனமாகவும், பணமாகவும் துணை நில்லுங்கள்!

அன்னைத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல; அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி! மக்களின் நல்வாழ்விற்கு ஆற்றப்படும் தொண்டு! என்ற என்னுயிர் அண்ணன் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சி மொழிகளுக்கேற்ப,

அனைத்து உயிர்களுக்குமான தூய நல்லரசியலை விதைக்க, அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அஞ்சாது, உண்மையும் நேர்மையுமாக நின்று, தமிழ்-தமிழர்-தமிழ்நாடு உரிமைகளுக்கும், நாளைய தலைமுறைப்பிள்ளைகளின் நல்வாழ்விற்குமான தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்து, பணபலமும் ஊடக பலமும் இல்லாமல், தேர்தல் களத்தில் எவ்வித சமரசமோ, தத்துவத் தடம்பிறழ்வோ இன்றி எளிய மக்களும் அதிகாரத்தை அடையும் நோக்கில் மண்ணையும் மக்களையும் மட்டுமே நம்பி தொடர்ச்சியாகத் தனித்துப் போட்டியிட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி.

நமது கடின உழைப்பின் விளைச்சலாக கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 36 இலட்சம் மக்களின் மனங்களை வென்று 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி-அதிகாரம் மட்டுமே என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் கூற்றுக்கிணங்க ஆட்சி-அதிகாரத்தை நோக்கிய பெரும்பயணத்தில் நாம் அடைந்த வரலாற்றுப் பெருவெற்றியாக இதனைக் கருதி புத்தெழுச்சிப் பாய்ச்சலுடன் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அணியமாவோம் என்று என் பேரன்பிற்குரிய நாம் தமிழர் உறவுகளுக்கும், உயிர்க்கினிய தம்பி-தங்கைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறேன்.

அதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சிக்கு என விரைவில் ஒதுக்கப்படவிருக்கும் பொதுச்சின்னத்தை தமிழ்நாடெங்கும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நல்வாய்ப்பாக அமைந்துள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வழமைப் போல நாம் தமிழர் கட்சி நம் மக்களை முழுமையாக நம்பி தனித்து களம் காண்கிறது

விரைவில் வேட்பாளர் அறிவிப்பும், புதிய சின்னம் அறிவிப்பும் நடைபெறவிருக்கிறது.

எனவே, இடைத்தேர்தல் பரப்புரைக்கான தேர்தல் பணிமனை, மேடை ஏற்பாடு, ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி, வாகன எரிபொருள், உணவு போன்ற இன்றியமையாச் செலவுகளுக்கு, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

click here to donate Donate